சென்னை
முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தமிழகத்தில் அரசியல் கூட்டங்களுக்கு வரும் 19 முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அறிக்கையில்
சமுதாயம்-விளையாட்டு-மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் அனுமதி.திறந்தவெளியில் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் ஆட்களை அனுமதிக்கலாம்.
மாவட்ட ஆட்சியர்களிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம். சென்னை மாநகராட்சியில் காவல் ஆணையரின் அனுமதியை பெற வேண்டும்
கல்வி-கலாச்சார-பொழுதுபோக்கு கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.