தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பல்வேறு கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

தி.மு.க., அ.ம.மு.க., தே.மு.தி.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

சென்னை,

அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த அ.ம.மு.க. நிர்வாகிகளான திருவள்ளூர் தெற்கு மாவட்டம், திருநின்றவூர் நகர அ.ம.மு.க. விவசாய பிரிவை சேர்ந்த சி.ஜானி சாமி பிள்ளை, திருநின்றவூர் நகர துணைச் செயலாளர் எஸ்.கண்ணன், நகர மகளிர் அணிச் செயலாளர் ஜி.ராதிகா, நகர தொழிற்சங்கச் செயலாளர் கோ.கு.சீனிவாசன், அம்பத்தூர் பகுதி இணைச் செயலாளர்கள் அம்மா ரவி, டி.ஜே.தினேஷ்குமார், பகுதி பேரவைத் தலைவர் சந்தோஷம். அம்பத்தூர் வடக்குப் பகுதி, 83-வது வட்டச் செயலாளர் எஸ்.ரஜினிகுமார், 84-வது வட்ட துணைச் செயலாளர் சிட்டிபாபு, 85-வது வட்டச் செயலாளர், 81-வது வட்ட பிரதிநிதி பி.அமர்நாத், எம்.திருஞானம், மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் பி.டில்லி பாபு, அம்பத்தூர் கிழக்குப் பகுதியை சேர்ந்த கராத்தே பாலு, முகமது சலீம் ஆகியோர் தங்களை அக்கட்சியில் இணைத்து கொண்டனர்.

தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் கட்சியினர்

அதே போல் தி.மு.க.வைச் சேர்ந்த, திருநின்றவூர் நகர மகளிர் அணி துணை அமைப்பாளர் நிர்மலா, நகர தொழிற்சங்கப் பிரிவுச் செயலாளர் ஏ.சுந்தர்ராஜன், தே.மு.தி.க.-வைச் சேர்ந்த அம்பத்தூர் பகுதிச் செயலாளர் ஏ.பிரபாகரன், அம்பத்தூர் மேற்கு பகுதி, மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த, அம்பத்தூர் நகரச் செயலாளர் எம்.சந்தானம் மற்றும் ஜெ.பூபதி, வி.தனசேகர், எம்.ஜானகிராமன், பீட்டர் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது, அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின், முன்னாள் எம்.எல்.ஏ. வி.அலெக்சாண்டர், அம்பத்தூர் மேற்கு பகுதி செயலாளர் கே.பி.முகுந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.