சென்னை,
தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று மாலை ஈரோடு தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆர்.ரமேஷ்குமார் தலைமையில் பா.ம.க.வை சேர்ந்த ஈரோடு மத்திய மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த ஈரோடு மாநகரம், 15-வது வட்டச் செயலாளர் கே.ஆர்.ராஜேந்திரன், 15-வது வட்ட பிரதிநிதி எஸ்.மணிகண்டன், நகர மாணவர் அணி ஜி.சுரேஷ்குமார், 59-வது வட்ட துணை செயலாளர் ஜே.சந்திரசேகரன், 58-வது வட்ட அவைத் தலைவர் சோமசுந்தரம் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.