தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் மேலும் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த மேலும் 300 பேர் தி.மு.க. வில் இணைந்தனர்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியின் விவசாய அணி துணை தலைவர் தே.மதியழகன், சிறுபான்மை நல உரிமை பிரிவு இணை செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஏற்பாட்டில் ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட இணை செயலாளர் எஸ்.கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ஏ.சலீம்பாஷா, மாவட்ட வக்கீல் அணி செயலாளர் ஆர்.கோவிந்தராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் கே.விஜயகுமார், மாவட்ட மகளிரணி செயலாளர் எம்.சுபலட்சுமி உள்பட 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

300 பேர் இணைந்தனர்

தர்மபுரி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றத்தின் இணை செயலாளர் பி.செந்தில்குமார் தலைமையில் அரூர் ஒன்றிய செயலாளர் ரஜினிமாறன், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் எஸ்.பாபு, மாவட்ட துணை செயலாளர் ஜி.ரஜினிகாந்த், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் பி.பானுமதி பெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் எம்.குமரபிரபு, வக்கீல் பிரிவு செயலாளர் பெருமாள் உள்பட 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுசெயலாளர் ஆ.ராசா உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு