தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.ம.மு.க மாவட்ட செயலாளர் தி.மு.க.வில் இணைந்தார்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.ம.மு.க மாவட்ட செயலாளர் தி.மு.க.வில் இணைந்தார்.

சென்னை,

தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மதுரையில், அ.ம.மு.க. கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பருவாச்சி எஸ்.பரணீதரன் மற்றும் அ.ம.மு.க. கட்சியின் மாநில மாணவர் அணி இணை செயலாளர் ஈரோடு எம்.பிரபு ஆகியோர் தலைமையில் பவானி நகர செயலாளர் வாணி கே.குமரன், நகர இணை செயலாளர் எம்.பாக்கியராஜ், நகர இளைஞர் அணி செயலாளர் எம்.அருண்குமார் நகர எம்.ஜி.ஆர். பேரவைச் செயலாளர் பி.பாலமுருகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் எம்.சிவகுமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் எஸ்.செல்வக்குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆர்.கார்த்திக்,

மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜே.சந்தோஷ் டோமினிக், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் என்.ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் கே.ரமேஷ், மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் கோட்டை கார்த்தி, சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் மில்டன் உள்பட பலர் தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்வின்போது, துணை பொதுச்செயலாளர் பெரியசாமி எம்.எல்.ஏ., கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். mஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...