தமிழக செய்திகள்

அம்மன் கோவில்களில் ஆடி மாதம் கூழ் வார்க்க தானியம் வழங்க உத்தரவு மு.க.ஸ்டாலினுக்கு பூசாரிகள் சங்கம் நன்றி அறிவிப்பு

கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் பி.வாசு பூசாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தினத்தந்தி

சென்னை,

கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சிறிய கோவில்களில் ஆடி மாதம் கூழ் வார்த்தல் நிகழ்ச்சிக்கு போதிய தானியங்கள் கிடைப்பதில்லை. கோவில்களிலும் தானியங்கள் வாங்கும் அளவுக்கு போதிய வருமானமும் இல்லை. நோய் தொற்று பரவல் காரணமாக கோவில் நடைசாற்றப்பட்டதால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கோவில்களுக்கு வருவாய் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் கிராமப்புற கோவில்களுக்கு ஆடி மாத கூழ்வார்த்தல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான தானியங்களை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதற்காக தமிழக முதல்-அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் அறநிலையத்துறை கமிஷனர் ஆகியோருக்கு நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?