தமிழக செய்திகள்

போடியில்அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் தர்ணா

போடியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போடி நகராட்சி 17-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் சித்ரா தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று போஜன் பார்க் பஸ் நிறுத்தத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது, எங்கள் வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் பாலங்கள் சரியான முறையில் கட்டப்படவில்லை. இதனால் கட்டப்பட்ட சில நாட்களில் சேதம் அடைந்துள்ளது. அடிப்படை வசதிகள் ஏதும் சரியான முறையில் செயல்படுத்த படவில்லை. தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ள வார்டுகள் தவிர மற்ற வார்டுகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி தலைமையிலான போலீசார் மற்றும் போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...