தமிழக செய்திகள்

திருவள்ளூர்: கணவன் உயிரோடு தீ வைத்து கொளுத்தியதில் மனைவி பரிதாப பலி

திருவள்ளூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு தனது மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கம்மவார்பாளையம் பஸ் ஸ்டாண்ட் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் திருவள்ளூரில் வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிரசன்னா (30). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் கடந்த நிலையில் சாய்கணேஷ் (11) என்ற மகனும், குஷி (6) என்ற மகளும் உள்ளனர்.

பிரசன்னா அனைவரிடமும் கலகலப்பாக பேசக்கூடியவர். இந்நிலையில் பிரசன்னா நடத்தை மீது சுரேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டு தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தனது மனைவி உடலின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.

இதில் 80 சதவீத தீ காயங்களுடன் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த பிரசன்னா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் சுரேஷை பென்னலூர்பேட்டை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்