தமிழக செய்திகள்

திருக்கோவிலூரில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது

திருக்கோவிலூரில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் மெடிக்கல் நடத்தி வருபவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது. இதையடுத்து மாவட்ட கலெக்டா ஷ்ரவன் குமார் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட மருந்துகள் ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான குழுவினர் திருக்கோவிலூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

2 பேர் கைது

அதில் திருக்கோவிலூர் பள்ளிவாசல் தெருவில் மெடிக்கல் நடத்தி வரும் ராமலிங்கம்(வயது 60), திருக்கோவிலூர் அருகே செட்டித்தாங்கல் கிராமத்தில் மெடிக்கல் வைத்து நடத்தி வரும் ரமேஷ் காந்த்(53) ஆகியோர் மருத்துவப்படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் சுகாதாரத்துறையினர் பிடித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கம், ரமேஷ்காந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு