திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவிலை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் முருகேசன் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகில் உள்ள கழிவு நீர் ஓடையில் நிலை தடுமாறி விழுந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை ஓடையிலிருந்து தூக்கியுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் கோவில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.