தமிழக செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. இதில் சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்ப்பட்டு, திருவள்ளூர்,மதுரை, தேனி, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டக்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12,376 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது வரை 4,271 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். இதுவரை 7,897 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவிற்கு மாவட்டத்தில் 208 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை