தமிழக செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 166 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி உள்ளன

திருவள்ளூர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,806 ஆக இருந்தது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனோ பாதித்தோர் எண்ணிக்கை 4,972 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது வரை 94 உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,816 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...