கன்னியாகுமரி மாவட்டம் பத்தனாபுரத்தை சேர்ந்தவர் ஜாண்ரோஸ். இவரது மகன் பிரதீப் (வயது 32). இவர் தூத்துக்குடியில் உள்ள நண்பர்களை பார்ப்பதற்காக அடிக்கடி வந்து செல்வாராம். இவர் நேற்று முன் தினம் இரவு சிதம்பரநகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜான்ரோசை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த பிரதீப், ரத்தம் வடிந்த நிலையில் நடந்து சென்று அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.