தூத்துக்குடி போல்பேட்டை பொ. தங்கம்மாள் நினைவு தொடக்கப்பள்ளியில் பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு இலவச சீரூடைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட், பெரியசாமி கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் சுதன்கீலர், சுதா சுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.