தமிழக செய்திகள்

தூத்துக்குடியில்வீட்டுவசதி வாரிய குடியிருப்பில்ஆசிரியர் தினவிழா

தூத்துக்குடியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஆசிரியர் தினவிழாகொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஆசிரியை மாரியம்மாள் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். செயலாளர் காமாட்சி முன்னிலை வகித்தார். வக்கீல் விஜயசுந்தர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சம்பத் சாமுவேல் ஆகியோர் பாராட்டி பேசினர். விழாவில் ஆசிரியர் பணியுடன் சமூக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மன்ற தலைவர் மைதிலி செல்வராஜ் விருதுகளை வழங்கி பாராட்டினார். சிறப்பு அழைப்பாளராக அமுதா கலந்து கொண்டு பேசினார். விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற பொருளாளர் பத்மலதா, துணைத்தலைவர் சாந்தி, பல்டாக்டர் மேகலா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பாலகுருசாமி நன்றி கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு