தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் பொதுமக்களிடம் மரியாதை குறைவாக நடந்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம்

தூத்துக்குடியில் பொதுமக்களிடம் மரியாதை குறைவாக நடந்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தினத்தந்தி

போலீஸ்காரர்

தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இவர் மீது பணி நேரத்தில் மது அருந்தி இருந்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன விசாரணை நடத்தினார்.

பணியிடை நீக்கம்

விசாரணையில், போலீஸ்காரர் செல்வகுமார் பொதுமக்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டது தெரிய வந்தது. மேலும் மூதாட்டி ஒருவரும் போலீஸ்காரர் செல்வகுமார் மீது புகார் அளித்ததாக தெரிகிறது.

இதையடுத்து போலீஸ்காரர் செல்வகுமாரை பணி இடைநீக்கம் செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

---

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்