தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று மாநகர பகுதியில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்