தமிழக செய்திகள்

விளாத்திகுளத்தில் கஞ்சா விற்றவர் சிக்கினார்

விளாத்திகுளத்தில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரசோலை தலைமையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகே உள்ள சுகாதார வளாகம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக முறையில் நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர், தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பாலதண்டாயுத நகரைச் சேர்ந்த சண்முகையா மகன் அஜய் மாடசாமி என்ற மாடசாமி (வயது 41) என்பதும் அப்பகுதியில் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் சய்தனர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய் மாடசாமியை கைது செய்தனர். அஜய் மாடசாமி மீது சூரங்குடி போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு