எட்டயபுரம்:
எட்டயபுரம் மேலவாசல் பகுதியில் ஆவின் பாலகம் புதிய கிளை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவநீதக்கண்ணன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் சேர்மன் சுரேஷ் வரவேற்று பேசினார்.
இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, ஆவின் பாலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சவுந்தர்ராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுமதி இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.