தமிழக செய்திகள்

வெள்ளவேடு பகுதியில் வேளாண் விரிவாக்க மையம் திறப்பு விழா

வெள்ளவேடு பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் தலைமை தாங்கி புதியதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தினத்தந்தி

திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சரும், தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி புதியதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து அவர் வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் கூட்டுறவு துறை சார்பாக 35 பயனாளிகளுக்கு ரூ.24 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, திருத்தணி எம்.எல்.ஏ சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, திருவள்ளூர் சப்-கலெக்டர் மகாபாரதி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேசிங்கு, வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு