தமிழக செய்திகள்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா: கட்சி, சாதி, சமய பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் - இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழாவில் கட்சி, சாதி, சமய பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை,

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனை படைத்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு கவுரவம் செய்யும் வகையில் தமிழக அரசு திருச்செந்தூரில் அவருக்கு மணிமண்டபம் அமைத்துள்ளது. இந்த மணிமண்டப திறப்பு விழா வரும் 22-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் பெருமளவில் பங்கேற்பது தொடர்பான இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டம் பெரம்பூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் பி.சின்னமணி நாடார் தலைமை தாங்கினார். செயலாளர் வி.டி.பத்மநாபன் நாடார், இந்திய நாடார் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் துணை தலைவர் டி.ராஜ்குமார், நாடார் மகாஜன சங்க பொருளாளர் ஈரோடு ஏ.மாரியப்பன், மதுரை நாடார் உறவின் முறை பொது செயலாளர் வி.பி.மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

*திருச்செந்தூரில் 22-ந் தேதி திறக்கப்பட உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் அனைவரும் சேர்ந்து சிறப்பிக்க வேண்டும். அரசு விழாவாக கொண்டாடப்பட்டாலும், நாடார் சமுதாய மக்களுக்கு மட்டுமல்லால் அனைத்து சாதி, சமய மக்களும் பயன்பெறும் வகையில் திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்வி குழுமங்களை அமைத்து ஏழை, எளிய பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள், மீனவ சமுதாய மக்கள், சிறுபான்மையினர் கல்வி பயில துணை நின்றவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவருடைய மணிமண்டப திறப்பு விழாவில் நாம் அனைவரும் கட்சி, சாதி, சமய பாகுபாடின்றி பெருந்திரளாக கலந்து கொண்டு, நமது குடும்ப விழாவை சிறப்பிக்க வேண்டும்.

*தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அனைத்து நாடார் சமுதாய அமைப்புகளின் சார்பாக வேன் மற்றும் பஸ் வசதிகள் செய்து கொடுக் கப்பட்டு, சமுதாய சொந்தங்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென இக்கூட்டத் தில் தீர்மானிக்கப்பட்டது.

*டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவினுடைய இந்திய நாடார் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களாக தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் துணை தலைவர் டி.ராஜ்குமார், நாடார் மகாஜன சங்க பொருளாளர் ஈரோடு ஏ.மாரியப்பன், மதுரை நாடார் உறவின் முறை பொது செயலாளர் வி.பி.மணி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...