தமிழக செய்திகள்

தமிழ் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

தோகைமலை தமிழ் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும், தாகம் தீர்க்கும் வகையிலும் நேற்று தோகைமலை தமிழ்சங்கம் சார்பில் தோகைமலை போலீஸ் நிலையம் அருகே நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தோகைமலை தமிழ் சங்க நிறுவனத்தலைவர் காந்திராஜன், தமிழ் சங்கத்தின் இயக்குனர் சந்திப்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், பழச்சாறு உள்ளிட்டவைகளை வழங்கினர்.

இதில், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் சங்கத்தின் செயலாளர் குணசேகரன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்