மதுரை,
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. சுமார் 206 கோடி ரூபாய் செலவில் இந்த கலைஞர் நூலகம் கட்டிடம் உள்ளது. இது 3.56 ஏக்கர் பரப்பளவில் கீழ்த்தளம், தரைத்தளம் என மொத்தம் ஆறு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நூலாக பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் சட்டநூல்கள் இடம் பெற்றுள்ளது. சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த பிரிவு உபயோகமானதாக இருக்கும்.