வேளாங்கண்ணி:
கீழையூர் காளியம்மன் கோவில் அருகில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு கீழையூர் வட்டார வேளாண்மை வளர்ச்சிகுழு தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை தாங்கினார். நாகை இணைபதிவாளர் அருளரசு, திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண் இயக்குனர் சங்கர், ஊராட்சிமன்ற தலைவர் ஆனந்தஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகை மாலி எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பகுதிநேர ரேஷன் கடையை திறந்துவைத்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கினார். இதில் நாகை துணைபதிவாளர் (பொது வினியோகத் திட்டம்) பன்னீர்செல்வம், கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பால்ராஜ், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஞானசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.