தமிழக செய்திகள்

பரப்பாடியில் புதிய வாரச்சந்தை தொடக்க விழா

பரப்பாடியில் புதிய வாரச்சந்தை தொடக்க விழா நடந்தது.

தினத்தந்தி

இட்டமொழி:

பரப்பாடி பாரதிநகர் பஸ் நிறுத்தம் அருகில் இலங்குளம் பஞ்சாயத்து தலைவரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளருமான வி.இஸ்ரவேல் பிரபாகரன் ஏற்பாட்டில், வியாழக்கிழமைதோறும் நடைபெறும் புதிய வாரச்சந்தை தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கினார். நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு முன்னிலை வகித்தார்.

பரப்பாடி ஷாலோம் மருத்துவமனை டாக்டர் அலெக்ஸ் எட்வர்ட்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் நாங்குநேரி ஒன்றிய கவுன்சிலர் நல்லாசிரியர் மை.ரா.அகஸ்டின் கீதராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் த.சேகர், பஞ்சாயத்து துணைத்தலைவர்கள் ஏ.விஜி, புஷ்பபாண்டி, தொழில் அதிபர் சிவந்தியாபுரம் கிருஷ்ணன், தி.மு.க. கிளை செயலாளர்கள் ஜார்ஜ், வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பு பரிசு குலுக்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்