தமிழக செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட மீன்பிடி இறங்கு தளம் திறப்பு விழா

சேதுபாவாசத்திரத்தில் புதுப்பிக்கப்பட்ட மீன்பிடி இறங்கு தளம் திறப்பு விழா நடந்தது.

தினத்தந்தி

சேதுபாவாசத்திரம்:

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், சேதுபாவாசத்திரம் மீனவ கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.இதையொட்டி, சேதுபாவாசத்திரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, பெயர் பலகையை திறந்து வைத்தார்.இதில் நாகை மண்டல மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, மீன்வளத்துறை செயற் பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் மோகன் குமார், சேதுபாவாசத்திரம் மீன்வளத்துறை சார் ஆய்வாளர் ஜே.பியூலா, கடலோர காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன், தலைமை காவலர் ராஜா, விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்