தமிழக செய்திகள்

மோசமான வானிலை: சென்னையில் 8 விமானங்கள் ரத்து

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், வர இருந்த 4 விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் கடந்த 4 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. வங்கக்கடலின் தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

வெள்ள நீரால் சென்னை ஏற்கனவே தத்தளித்து வரும் நிலையில், இன்று பெய்து வரும் கனமழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னையில் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் மேகமூட்டத்தால் பார்வை சரியாக தெரியாத காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், வர இருந்த 4 விமானங்கள் என, அதாவது மதுரை, திருச்சி,மும்பை ஷார்ஜாவில் இருந்து வருகை தரும் மற்றும் புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்