கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தொடர் மழை: வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

வால்பாறை,

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. தொடர் மழையால் நடுமலை, வெள்ளிமலை டனல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் அடிப்படை அணையாக விளங்கும் சோலையாறு அணை நிரம்பியது.

அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு வினாடி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் சோலையாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு, உபரி நீர் கேரளாவிற்கு ஒரு மணி நேரத்திற்கு 1,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வால்பாறை பகுதி முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்