தமிழக செய்திகள்

கே.சி.வீரமணி 5 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து சேர்ப்பு - வழக்குப்பதிவு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 5 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராக செயல்பட்டவர் கே.சி.வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பெயரில் கே.சி.வீரமணி வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை 28.78 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்களை வாங்கியுள்ளார். ஆனால், அவருக்கு 1.83 கோடி ரூபாய்க்கு மிகாமல் சொத்து இருந்திருக்க வேண்டும். கே.சி. வீரமணி 5 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து சேர்த்துள்ளார் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது