தமிழக செய்திகள்

வருமானவரித்துறை விவகாரம்: தி.மு.க.வினர் 15 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

வருமானவரித்துறை விவகாரத்தில் தி.மு.க.வினர் 15 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கரூர் காட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

15 பேர் கைது

கரூரில் கடந்த மே மாதம் 26-ந்தேதி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது தி.மு.க.வினர் அதிகாரிகளை சோதனை செய்யவிடாமல் தடுத்து அவர்கள் வந்த காரை சேதப்படுத்தினர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. கவுன்சிலர்கள் லாரன்ஸ், பூபதி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 15 பேர் ஜாமீன் கேட்டு கரூர் கோர்ட்டில் மனு அளித்ததையடுத்து அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

நிபந்தனை ஜாமீன்

இந்த ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வருமானவரித்துறை சார்பில் அளிக்கப்பட்ட மனுவை தொடர்ந்து அவர்களது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து தி.மு.க.வினர் 15 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தி.மு.க.வினர் கரூர் கோர்ட்டில் மீண்டும் ஜாமீன்கோரி மனு அளித்தனர். இந்த மனுவை விசாரித்த கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அம்பிகா தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 15 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்