தமிழக செய்திகள்

சென்னையில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களின் வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.

இந்த புகாரை தொடர்ந்து, நேற்று முன்தினம் சென்னை உள்பட தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்நிலையில், இந்த சோதனையானது 3-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.

திருவான்மியூரில் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் என்பவரது வீடு, அபிராமபுரத்தில் ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் தங்கவேலு ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முழுமையான சோதனைக்கு பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து