சென்னை,
தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் கோவை அன்னூரில் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணனுக்கு சொந்தமான காளப்பட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.