தமிழக செய்திகள்

முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு

முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையில் பணிபுரியும் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும், இடர் படி 800 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி தமிழக சிறைகளில் பணியாற்றும் காவலர்களுக்கான மிகைநேர பணிக்கான ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதெடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில், "சிறைத்துறையில் பணியாறும் முதல் மற்றும் 2ம் நிலை காவலர்களுக்கான மிகை நேர பணிக்கான ஊதியம் காவல்துறை காவலர்களுக்கு ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படும். இதற்காக ரூ.3.24 கேடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது