தமிழக செய்திகள்

மரவள்ளி கிழங்கு விலை உயர்வு

மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். தற்போது கிழங்கின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் ஜவ்வரிசி தயாரிக்கும் மரவள்ளி கிழங்கை மில் அதிபர்கள் டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் கொடுத்து வாங்கிச் சென்றனர். தற்பொழுது டன் ஒன்று ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்று ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது