தமிழக செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் - விமான நிலைய ஆணையகம் எச்சரிக்கை அறிவிப்பு

சென்னை விமான நிலையத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தைச் சுற்றி பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான நிலைய ஆணையகம் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு டிரோன் மண்டலம் இல்லை என்பதால் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் மீறினால் டிரோன் காட்சிகள் அழிக்கப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமான நிலைய ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது