தமிழக செய்திகள்

திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினம் தினம் அதிகரித்து வருகிறது. முதலில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருந்தது அதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது பிற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற்று நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,745 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 4173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7373 பேர், இதுவரை 200 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் இன்று மேலும் 437 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,201ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8787 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 2755 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 222 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்