சென்னை,
சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழா மற்றும் சிங்கப்பூர்-இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.