தமிழக செய்திகள்

சென்னையில் 8-வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிப்பு

சென்னையில் 8-வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியா முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன விமான சேவைகள் கடந்த 7 நாட்களாக பெரிதும் பாதிக்கப்பட்டன. நேற்று சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, ஆமதாபாத், கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், கோவை, அந்தமான், கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 38-க்கும் மேற்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும், அதேபோல் டெல்லி, புனே, மும்பை, கொச்சி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 33-க்கும் மேற்பட்ட விமானங்களும் என 71 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் 8-வது நாளாக இன்றும் இண்டிகோ விமானங்கள் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 23 புறப்பாடு, 18 வருகை என 41 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் தங்களின் பயண விவரங்களை விமான நிறுவனங்களிடம் தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைபோல நாடுமுழுவதும் உள்ள விமான நிலையங்களில் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

விமான பணியாட்களின் பணிநேர வரம்பு அட்டவணையில் மத்திய விமான போக்குவரத்து தளர்வுகளை தந்து உள்ளதாகவும், 10-ந்தேதிக்கு பிறகு விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை