சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 44 வாரங்களாக கடினமான பயிற்சிகளை முடித்த வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது.
இன்று நடைபெற்ற 476-வது பயிற்சி நிறைவு விழாவில், 525 வீரர்கள் எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விழாவில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையின் டி.ஐ.ஜி. ரன்வீர் சிங், பயிற்சி துணை காவல் அதிகாரி ப்ரீதம் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.