தமிழக செய்திகள்

பெரவள்ளூரில் குப்பை தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தை உடல் மீட்பு

பெரவள்ளூரில் குப்பை தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தை உடல் மீட்க்கப் பட்டது.

தினத்தந்தி

சென்னை பெரவள்ளூர், முத்துக்குமாரப்ப சாலையில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் பிறந்து 5 மாதமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு பரவள்ளூர் போலீசுக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குப்பை தொட்டியில் இறந்து கிடந்த குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த குழந்தையின் பெற்றோர் யார்? . குழந்தை இறந்தது எப்படி?. குழந்தையின் உடலை குப்பை தொட்டியில் வீசிச்சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்