தமிழக செய்திகள்

காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் ஆய்வு

மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியை காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தினத்தந்தி

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. காஞ்சீபுரம் பஸ்நிலையம் பின்புறம் உள்ள சி.எஸ்.ஐ. மிஷன் ஆஸ்பத்திரிக்கு உள்ளே நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியை காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின் போது மாநகராட்சி பணிக்குழு தலைவர் சுரேஷ், மாநகராட்சி என்ஜினீயர் கணேசன், உதவி என்ஜினீயர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து