தமிழக செய்திகள்

சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்; ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு - பழனிவேல் தியாகராஜன்

சீர்மிகு நகர திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு; அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்; ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

* சீர்மிகு நகர திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு; அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு

* கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர் தேக்கங்களுக்கு குழாய் மூலம் கொண்டு வர சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்

* நமக்கு நாமே திட்டத்தில் சிறப்பான பங்களிப்பவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்

*மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும்; நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியிட்டு தெருவிளக்குகள் அமைக்கப்படும், நீர்நிலைகளை மீட்டெடுக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு என கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு