தமிழக செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி துணி வியாபாரி படுகாயம்

தினத்தந்தி

பாப்பிரெட்டிப்பட்டி:

காரிமங்கலம் அடுத்த நத்தம்கோடியூரை சேர்ந்தவர் கவுதம் (வயது 30). இவர் பாப்பிரெட்டிப்பட்டியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கவுதம் நேற்று முன்தினம் மாலை மாட்லாம்பட்டியில் இருந்து தனது கடைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கெண்டிருந்தார். அப்போது பொம்மிடி- பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் வெங்கடசமுத்திரத்தில் சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கவுதமை அங்கிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பாப்பிரெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு