செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 1.5 கோடி ரூபாய் செலவில், ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று திறந்து வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புளியந்தோப்பு கட்டிட விவகாரத்தில் தவறு செய்த ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களையும் ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரக்கட்டுப்பாட்டுக் குழு மூலம் ஆய்வு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.