தமிழக செய்திகள்

அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

பழனி முருகன் கோவிலில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் மீண்டும் மின்இழுவை ரெயில் வழியாக அடிவாரம் வந்தடைந்தார். இதைத்தொடர்ந்து ரோப்கார் நிலையத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரோப்கார் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் 2-வது ரோப்கார் திட்ட பணிகளின் நிலை குறித்தும் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து அடிவாரம் மின்இழுவை ரெயில்நிலையத்துக்கு சென்றார். பின்னர் அங்குள்ள 3-வது மின்இழுவை ரெயில் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, செயற்பொறியாளர் நாச்சிமுத்து மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு