தமிழக செய்திகள்

தியாகராஜர் கோவில் குளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் கோவில் குளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

திருவாரூர்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோயில் கமலாலய குளத்தில் படகில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனைதொடர்ந்து தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் படகு சவாரி செய்து குளத்தின் நடுவில் உள்ள நாகநாதசுவாமி கோவிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

முன்னதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நெல் சேமிப்பு கிடங்குகளிலும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், "கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் 'தோற்றமளிக்கும்'. ஆனாலும் அது குளம்தான். அதன் 'நடுவண்' கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர்.

சென்ற வாரம் தலைமைச் செயலகத்திலிருந்து இருந்து காணொலிக் காட்சி வாயிலாக நான் புதிதாகத் திறந்து வைத்த நெல் கொள்முதல் நிலையத்தை இன்று திருவாரூரில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்