தமிழக செய்திகள்

டீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்... இன்று ஓய்வு பெறும் நிலையில் சோகம்

ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

தினத்தந்தி

ஊட்டி,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் தனபால். நீலகிரி மாவட்ட குற்ற பதிவேடு ஆவண காப்பக பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பணியில் இருந்த தனபால் ஊட்டி ஹில்பங்க் பகுதியில் உள்ள ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தனபால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவருக்கு ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும், மற்ற விவரங்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த இன்ஸ்பெக்டர் தனபால் இன்று(வெள்ளிக்கிழமை) பணி ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை