தமிழக செய்திகள்

மின் கம்பங்களில் புதிய இன்சுலேட்டர்கள் பொருத்தும் பணி

திருவெண்காடு, பூம்புகார் பகுதிகளில் மின் கம்பங்களில் புதிய இன்சுலேட்டர்கள் பொருத்தும் பணி நடந்தது.

தினத்தந்தி

திருவெண்காடு:

திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட திருவெண்காடு, மங்கை மடம், பெருந்தோட்டம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மழை, பலத்த காற்று வீசும் போது இன்சுலேட்டர்கள் பழுதாகி மின் தடை ஏற்படுகிறது. வரும் மழைக்காலத்தில் இதேபோன்று பழுதுகள் ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு திருவெண்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150 புதிய இன்சுலேட்டர் கருவிகள் பொருத்தும் பணி நடந்தது. இந்த பணியில் உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையில், ஆக்க முகவர் குணசேகரன், மின்பாதை ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகள் சரியாக செய்யப்படுகிறதா என சீர்காழி உட்கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் விஜய பாரதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் பூம்புகார் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட மேலையூர் மின் பாதையில் சுமார் 200 இன்சுலேட்டர்கள் பொருத்தும் பணியில் பூம்புகார் உதவி பொறியாளர் தினேஷ், ஆக்க முகவர் சேகர் ஆகியோர் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து