தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வில் விரைவில் உள்கட்சி தேர்தல்...!

அ.தி.மு.க.வில் விரைவில் உள்கட்சி தேர்தல். செயற்குழு, பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது.

சென்னை

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வது குறித்து கட்சியின் நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்த கருத்து அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்கலாமா?, வேண்டாமா? போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த் நிலையில் அ.தி.மு.க உள்கட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

முதலில், அ.தி.மு.க. கிளை கழக தேர்தல் நடத்தப்படும். அதன்பிறகு, ஒன்றிய கழகம், பேரூர், நகர கழகம், மாவட்டம் அளவிலான பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இறுதியாக, தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் நடக்கும்.

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

முதலில் உள்கட்சி தேர்தல், அடுத்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் என அ.தி.மு.க.வில் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. செயற்குழு, பொதுக்குழு அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் நடைபெறும். உள்கட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் 10-ந்தேதிக்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு