தமிழக செய்திகள்

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி

தானிப்பாடி, ரெட்டியார்பாளையம் அரசு பள்ளிகளில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

தானிப்பாடி, ரெட்டியார்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையும், சினம் தொண்டு நிறுவனமும் இணைந்து சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எஸ்.மீனாட்சி தலைமை தாங்கி பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஐக்கிய சபையின் அங்கமான சர்வதேச தொழிலாளர் நிறுவனம் மூலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தானிப்பாடி பகுதியில் அதிகமாக பள்ளிசெல்லா குழந்தைகள் இருப்பதால் இந்த பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பொதுவாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்பது நமது நோக்கம். 2025-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவதே முதல்-அமைச்சருடைய லட்சியம் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆத்திப்பழம், சினம் தொண்டு நிறுவன இயக்குனர் ராமபெருமாள், தலைமை ஆசிரியர்கள் பிரபு, மணிவண்ணன் மற்றும் ஆசிரியர், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் வேலு நன்றி கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு